முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை பிரியங்கா அவமதித்து விட்டார்: ஸ்மிரிதி இராணி

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Mar, 2019 12:38 pm
priyanka-gandhi-insults-former-pm-lal-bahadur-shastri-smiti-irani

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு, பிரியங்கா காந்தி வதோரா அவமரியாதை செய்து விட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வதோரா, தான் அணிந்திருந்த மாலையை எடுத்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அணிவித்து அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ஏற்கனவே தனது கழுத்தில் போடப்பட்ட மாலையை எடுத்து, அதுவும் இடது கையால் தொண்டர்களின் பலத்த கைத்தட்டல் சத்ததுடன் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மாலை அணிவிக்கிறார். இது, அவரது அகந்தையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான மதிப்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close