ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Mar, 2019 05:00 pm
pakistan-violated-ceasefire-at-around-2-45-pm-in-nowshera-sector-of-rajouri-district

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மதியம் இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி  இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள நவுசேரா பகுதியில் இன்று மதியம் தீவிரவாதிகள் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி  ‌கொடுத்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. 
இந்நிலையில் இன்று காலை சுந்தர்பானி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரம‌ரணமடைந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close