கர்நாடகா கட்டிட விபத்து- பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Mar, 2019 06:38 pm
dharwad-building-collapse-toll-rises-to-11-rescue-operation-still-underway

கர்நாடகாவில் அடுக்கு மாடி கட்டடிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமையன்று அக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில், அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் 3வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close