ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் துப்பாக்கி சண்டை

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Mar, 2019 11:15 am
an-encounter-has-started-between-terrorists-and-security-forces-at-imam-sahab-area-of-shopian

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சஹாப் என்ற பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

இதை அறிந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் 2 லிருந்து 3 தீவிரவாதிகள் அந்த வீட்டில் பதுங்கியருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close