ராகுல் நாளை பீஹாரில் தேர்தல் பிரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Mar, 2019 03:43 pm
rahul-to-kick-start-campaign-in-bihar-s-purnia

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பீஹாரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 

பீஹார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் கடும் இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

நாளை அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பீஹாரில் வங்க எல்லையையொட்டி சீமாஞ்சல் என்ற பகுதி உள்ளது. அங்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 18-ந்தேதியும், 23-ந்தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இங்குள்ள பூர்னியாவில் ராகுல்காந்தி நாளை பிரசாரம் செய்கிறார். இந்த பகுதியில் சிறுபான்மை மக்கள் 70 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவாளர்கள். அவர்கள் ஓட்டுகளை அள்ளும் வகையில் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close