ஜம்மு - காஷ்மீர்: பிரிவினைவாத அமைப்புக்கு தடை!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:28 pm
central-govt-has-today-declared-jammu-kashmir-liberation-frontas-unlawful-association

சட்டவிரோத விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததையடுத்து, ஜம்மு -காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்புக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

பிரிவினைவாத இயக்க தலைவர்களுள் ஒருவரான யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு -காஷ்மீர் விடுதலை முன்னணி, காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் நடவடிக்கைகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்துஈடுபட்டு வருகிறது. இதையடுத்து சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ், இந்த அமைப்புக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

இதேபோன்று, பிரிவினைவாத இயக்க தலைவர்களுக்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close