ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூபாய் 375 கோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Mar, 2019 11:56 am
jagan-mohan-reddy-files-nomination-declares-assets-worth-rs-375-crore


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியினுடைய சொத்து மதிப்பு ரூபாய் 375 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் நினைவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

தற்போதைய சட்டசபை தேர்தலுக்காக, தனது சொந்த மாவட்டமான கடப்பாவின் புலிவேந்துலா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், இவரின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு ரூபாய் 375 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 31 கிரிமினல் வழக்குகள் உள்ளன

இவரது மனைவி பாரதி பெயரில் ரூ.124 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், இரண்டு மகள்களின் பெயரில் ரூபாய் 6.5 கோடி மற்றும் ரூபாய் 4.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக, ரூபாய் 510 கோடி சொத்துக்கள் அந்தக் குடும்பத்திற்கு உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், அவர்களுக்கான கடனாக ரூ.66.7 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் தொழில் அரசியல் மற்றும் பொதுச்சேவை என்றும், அவர் மனைவி பாரதி தொழிலதிபர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close