பிரதமர் நரேந்திர மோடியை சிறையில் அடைப்பேன்- அரசியல்வாதியின் அறைகூவல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Mar, 2019 03:27 pm
would-put-modi-in-jail-for-murdering-kashmiris-spreading-hatred-says-nc-leader-javed-rana

எனக்கு அதிகாரம் இருந்தால் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சிறையில் அடைப்பேன் என்று காஷ்மீர் தேசியவாத மாநாட்டு கட்சி தலைவர் ஜாவத் அகமது ராணா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராணா கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மரணங்களுக்கு பிரதமர் மோடியே காரணம் என்று குற்றம் சாட்டினார்.  

இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார் என்றும் நாட்டில் ஒரு மதத்தையே ஊக்குவிப்பதாகவும் ராணா தெரிவித்தார்.

தனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் பிரதமர் மோடியை சிறையில் அடைப்பேன் என்று அவர் கூறினார். மேலும் பிரதமர் மோடி மனிதாபிமானமற்றவர் என்றும் தேசியவாத மாநாட்டு கட்சி தலைவர் ஜாவத் அகமது ராணா குறிப்பிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close