உத்தரப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதல்- 5 பேர் உடல் கருகி பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Mar, 2019 03:15 pm
5-burnt-alive-as-car-catches-fire-after-collision-in-up

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்- பரேலி சாலையில் இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேபாளத்தில் இருந்து பிலிபிட் நோக்கி வந்து கொண்டிருந்த நேபாள சுற்றுலா பேருந்து கண்ணி‌மைக்கும் நேரத்தில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கி, அதிலிருந்த பெட்ரோல் கசிந்து தீபற்றி எரியத் தொடங்கியது அதில் காரில் இருந்த 5 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே தீ‌யில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கோட்வாலி போலீசார் விரைந்து வந்து காரில் கருகிக் கிடந்த உடல்களை மீட்டு எடுத்தனர்.

காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக  தகவல் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close