காஷ்மீருக்குள் கால் வைக்க முடியாது: அமித்ஷாவை எச்சரித்தம் மெகபூபா!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Apr, 2019 04:34 pm
kashmir-will-turn-into-palestine-if-article-370-is-abolished-says-mehbooba-mufti

370வது பிரிவினை ரத்து செய்வது குறித்து பேசிவரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீருக்குள் கால் வைக்க அனுமதிக்க முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவினை நீக்கும் விஷயத்தில் பாஜக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, 370வது பிரிவினை ரத்து செய்வது குறித்து பேசிவரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ஜம்மு காஷ்மீருக்குள் கால் வைக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35 ஏ பிரிவினை நீக்கினால் ஒவ்வொரு காஷ்மீரிகளும் போராளியாவார்கள் என்றும் மெகபூபா  பேசியுள்ளார். 370வது பிரிவினை ரத்து செய்தால் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள படையாகவே இந்திய ராணுவத்தை கருதுவோம் என்றும் மெகபூபா கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close