திருச்சூர்- காதலிக்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - வாலிபர் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Apr, 2019 06:02 pm
college-student-set-on-fire-at-her-house-in-thrissur-man-arrested

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியை சேர்ந்தவர் நீது. கல்லூரி மாணவியான கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள நிதிஷ் என்பவன் நீதுவை பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீது அதற்கு மறுத்து வந்துள்ளார்..

இந்நிலையில் இன்று காலை 7:30 மணிக்கு இளம்பெண்ணின் வீட்டிற்கு நிதிஷ் சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோரும் இருந்துள்ளனர். நீதுவை தனியே அழைத்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

காதலிக்க முடியவே முடியாது என்று இளம்பெண் தீர்மானமாக கூறியதையடுத்து,  ஆத்திரமடைந்த நிதிஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து நீதுவின் தலைமுதல் உடல் முழுவதும் ஊற்றினார்.  நீது சுதாரிப்பதற்குள் அவர் மீது தீ பற்றவைத்தார்.

தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது.  பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே நீது உடல் கருகி உயிரிழந்தார்.

பொதுமக்கள் நிதிசை பிடித்து திருச்சூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close