பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 12:06 pm
2-dead-after-under-construction-building-collapses-in-bengaluru

பெங்களூரில் கட்டுமான பணி நடந்து வரும் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

வடக்கு பெங்களூரு, யஷ்வந்பூரில் உள்ள ஏபிஎம்சி வளாகத்தில், பன்னடுக்கு பார்க்கிங் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில், கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றி, மேற்கு வங்கத்தை சேர்ந்த ராகுல் மற்றும் பீகாரை சேர்ந்த ராகேஷ் ஆகிய 2 தொழிலாளிகளை சடலமாக மீட்டனர்.

மேலும் காயமடைந்த 8 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close