ஜம்மு-காஷ்மீர்- 2 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை!

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 05:50 pm
kashmir-stranded-vehicles-cleared-as-2-day-a-week-ban-on-civilian-traffic-begins

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கவர்னர் சத்யபால் சிங் தலைமையில் குடியரசுத்தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடிக்கண்டு பிடிக்கும் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே, தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. 

இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால், கடந்த 2 நாட்களாக இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, ரம்பான் மாவட்டத்தில் உள்ள அனோக்கி நீர்வீழ்ச்சி அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்பகுதியிலும் போக்குவரத்து முடங்கியது. 

இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, ஜம்முவை நோக்கி இன்று அதிகாலை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close