குஜராத்- காங்கிரஸ் கட்சியிலிருந்து அல்பேஷ் தாகூா் விலகல்

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 12:38 pm
alpesh-thakor-likely-to-quit-congress-after-thakor-sena

குஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக தலைவரும், எம்எல்ஏவுமான அல்பேஷ் தாகூா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாா். 

குஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக மக்களுக்கு உாிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவா் அல்பேஷ் தாகூா். கடந்த மாதம் இவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அல்பேஷ் தாகூா் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் தான் பதவி விலகியதாக அவா் தொிவித்தாா்.

மேலும் தனது சமூக மக்களின் உாிமைகளுக்காக தொடா்ந்து போராட போவதாகவும், வரும் மக்களவை தோ்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close