தெலுங்கானாவில் மண் சரிந்து விபத்து : தொழிலாளர்கள் 10 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 03:16 pm
10-workers-killed-after-being-buried-under-mound-of-mud-in-hyderabad


தெலுங்கானாவில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டத்தில் 10 கூலித் தொழிலாளர்கள் உயிாிழந்தனா்.

தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளா்கள் மண் எடுத்தபோது மண் சரிந்தது.

இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் பெண்கள் உள்பட  10 கூலித்தொழிலாளர்கள் உயிாிழந்தனா்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், துரதிருஷ்டவசமாக நடந்த இந்த  சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை வெளிப்படுத்தி  உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close