அமேதி எங்களின் புண்ணிய பூமி : பிாியங்கா உருக்கம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 07:08 pm
congress-chief-rahul-gandhi-filed-his-nomination-from-amethi-today

ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி, எங்கள் தந்தையின் புண்ணிய பூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா வதேரா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய  அமைச்சா் ஸ்மிருதி இரானி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா,  அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியிடம்  ட்புமனு தாக்கல் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா, "இந்த தொகுதிக்கும், தங்களது குடும்பத்துக்கும் இடையில் உள்ள நெருக்கமான பந்தம் தொடர்கிறது. சில உறவுகள் இதயத்தோடு நெருக்கமாக உள்ளவையாகும். இந்த அமேதி தொகுதி எங்கள் தந்தையின்  புண்ணிய பூமி, எனவே, இது எங்களது புனித ஸ்தலம். அதனால்தான், ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கலுக்காக நாங்கள் இங்கே குடும்பமாக வந்திருக்கிறோம்" என பிரியங்கா உருக்கமாக தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close