மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 07:00 pm
gadchiroli-one-security-personnel-injured-in-an-ied-attack-by-naxals

மகாராஷ்டிரா மாநிலம், கட்சோரி தொகுதிக்கு உட்பட கட்டா எனுமிடத்தில்,  மாவோயிஸ்ட்கள் இன்று நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை போலீஸார்  (சிஆர்பிஎஃப்) ஒருவர் படுகாயமடைந்தார்.

மக்களவைத் தேர்தலில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 91 தொகுதிகளில், கட்சோரியும் ஒன்று. இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக இத்தொகுதிக்குட்பட்ட கட்டா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடாவில் நேற்று நிகழ்த்தப்பட்ட நக்சல்கள் தாக்குதலில், பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி, அவரது பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close