மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2பேர் படுகாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 03:34 pm
2-injured-after-foot-overbridge-collapses-in-navi-mumbai-s-vashi

மும்பையில் பழமையான நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

நவி மும்பை வாஷி, சாகர் விகார் பகுதியில், 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடைமேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. 

நேற்று பயணிகள் சிலர் இந்த மேம்பாலம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாா்ச் மாதம் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 போ் உயிாிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close