டெல்லியில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எாிந்து நாசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 03:57 pm
delhi-fire-breaks-out-at-a-clothes-showroom-in-uttam-nagar

டெல்லியில் உள்ள துணிக்கடையில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எாிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியின் உத்தம் நகரில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன என முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. மின்கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close