ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Apr, 2019 11:22 am
two-terrorists-killed-in-shopian-encounter

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிழக்கு ஜம்மு காஷ்மீாில் உள்ள சோபியான் மாவட்டத்தில்,காஹந்த் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் போில் அப்பகுதியில் ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினா் மீது துப்பாக்கியால் சுட்டனா்.  இதையடுத்து இந்திய ராணுத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினா்.

இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். தொடா்ந்து அப்பகுதியில் இந்திய ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close