தன் உயிரை கொடுத்து 30 பேரை காப்பாற்றிய நாய்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Apr, 2019 04:00 pm
pet-dog-alerts-residents-to-major-fire-in-up-s-banda-dies-a-hero

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, நாய் ஒன்று தன் உயிரை கொடுத்து, மக்களை காப்பாற்றியுள்ளது. இச்சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாந்தா பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்றிரவு முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு பிராணியாக இருந்த நாய் மோப்பம் பிடித்தது. உடனடியாக குரைக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து ஒரே இடத்தை பார்த்துக் குரைத்துக் கொண்டு இருக்கவே, அந்த கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

அப்போது அதே காலனியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூமில் மின்சாரம் வழங்கும் வயர்களில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எாிவது தொியவந்தது.

தீ வேகமாக பரவவே, உடனடியாக அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் இருந்து மக்களை சத்தம் எழுப்பி காப்பாற்றிய அந்த நாய், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து, தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். தன் உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றிய அந்த நாயை நினைத்து அப்பகுதி மக்கள் கண்ணீா் விட்டனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close