இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை !

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 12:26 pm
madhya-pradesh-woman-shamed-forced-to-walk-with-husband-on-shoulders

கணவன் விட்டைவிட்டு வெளியேறி, வேறு சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணுக்கு, அவரது கணவனை தோளில் சுமந்து செல்லும்படி கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது..

மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டம் தேவிகார் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்,  அவரது கணவரின் வீட்டைவிட்டு வெளியேறி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  தனது கணவனை தோளில் சுமந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என, அந்தப் பெண்ணுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணவனை சுமந்து சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த ஆண்கள் பலர், வழிநெடுகிலும் அவரை அடித்தும், அவதூறாக பேசியபடியும் வந்துள்ளனர். 

ஒருகட்டத்தில், கணவனை சுமக்க முடியாமல் பெண் கீழே சரிந்தபோது, இழிவாக பேசி சத்தமிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close