காஷ்மீர் விவகாரம்: பாஜக மீது முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு !

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 01:09 pm
mehbooba-mufti-counter-pm-modi

இந்தியாவை பிாிக்க பாஜக தான் முயல்கிறது என்று ஜம்மு - காஷ்மீா் மாநில முன்னாள் முதல்வா் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அந்த மாநிலத்துக்கு தனி பிரதமர் தேவை" என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது": என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் இக்கருத்தை விமர்சித்து, தமது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள பதிவில்,  "முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பாஜகதான் நாட்டை பிரிக்க விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close