உத்தரப்பிரதேசம்- தேர்தலில் போட்டியிடும் திரையுலக நட்சத்திரங்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 01:09 pm
lok-sabha-election-2019-star-candidates-in-up

உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும், பாஜகயின் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை நான்காக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரே நட்சத்திரத்திற்கு தான் வாய்ப்பு அளித்துள்ளது.

பாலிவுட் முன்னாள் நடிகை ஹேமமாலினி, மதுரா தொகுதியிலும், பாலிவுட் முன்னாள் நடிகை, ஜெயப்ரதா ராம்பூா் தொகுதியிலும், போஜ்பூரி நடிகர்கள், ரவிகிஷன், கோரக்பூரிலும், தினேஷ் லால் யாதவ், அசம்கார் தொகுதியிலும், பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் சார்பில், ராஜ் பப்பர் மட்டுமே, சீட் பெற்றுள்ளார். அவர், பதேபூர் சிக்ரியில் நிற்கிறார்.மொத்தம், 80 தொகுதிகளுடன், ஏழு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் இந்த மாநிலத்தில், இன்னும் சில நட்சத்திரங்களுக்கு, பாஜக வாய்ப்பு கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close