ராகுல் பேசும் பேச்சுகள் நகைச்சுவையானவை : தேவேந்திர பட்நாவிஸ்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 06:11 pm
rahul-s-public-speeches-have-high-humour-quotient-fadnavis

கோவாவில் அமைந்துள்ள சங்கலிம் பகுதியில் நடைபெற்ற, பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய, மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு நகைச்சுவையாக உள்ளதாகவும், அவரது பேச்சில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் கூறினார். 

மேலும் பேசிய அவர், ஏழை குடும்பங்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து ராகுல் கொண்டு வருவார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து இத்திட்டத்துக்கான நிதி பெறப்படும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய பட்நாவிஸ், பிரதமா் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் அரசு கருவூலத்தில் நிதி குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பிரதமா் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து, கருவூல நிதியை ஏழைகளுக்கு பயன்படுத்துவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close