உத்தரப்பிரதேசம்: ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன; 5 பேர் படுகாயம் !

  டேவிட்   | Last Modified : 20 Apr, 2019 08:33 am
5-injured-as-10-coaches-of-delhi-bound-train-derail-near-kanpur

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் டெல்லி செல்லும் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த  விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கொல்கத்தாவின் ஹவுர நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி சென்ற விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேசம் கான்பூரை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் அடைந்தது.  அப்போது ரெயிலின் 10 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.  தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த 5 பயணிகளை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close