ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 05:13 pm
jyothi-vijayakumar-woman-behind-rahul-gandhi-s-wayanad-speech-translation

காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சை, மலையாளத்தில் துல்லியமாக மொழிபெயர்த்து கேரளாவை சேர்ந்த பெண் மொழிபெயர்ப்பாளர் அசத்தினார். இதனால், மொழிபெயர்ப்பாளர் சிக்கல் தீர்ந்து காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது.

வயநாடு தொகுதி பத்தனாபுரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆங்கிலப்பேச்சை, ஜோதி ராதிகா விஜயகுமார் என்ற பெண் மலையாளத்தில் மொழிபெயர்த்தார். அவரது துல்லியமான மொழிபெயர்ப்பு, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஏற்கனவே, ராகுலின் பேச்சை மொழிபெயர்த்த மூத்த தலைவர், பி.ஜே.,குரியன் சொதப்பியதோடு, அது பெரும் காமெடியாக மாறிப்போனது. முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரியில் தங்கபாலு, கிருஷ்ணகிரியில் பேராசிரியர் பழனித்துரை ஆகியோரின் மொழிபெயர்ப்பும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், ஜோதியின் மொழி பெயர்ப்பால், கேரள காங்கிரசார் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஜோதி ராதிகா, வழக்கறிஞர் மற்றும் திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சமூகவியல் பாட பயிற்றுனர். அவரது சிறந்த மொழிபெயர்ப்பை அடுத்து, திருவனந்தபுரம் கூட்டத்தில் ராகுல் பேச்சை மொழிபெயர்க்கவும் காங்கிரசார் அவரை அழைத்துச் சென்றனர்.

இன்று வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்காவின் பேச்சையும், இவரே மொழி பெயர்ப்பு செய்தார். கடந்தாண்டு செங்கனுார் எம்.எல்.ஏ., தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் என்பவரது மகள் தான் இந்த ஜோதி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close