கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 04:37 pm
karnataka-campaigning-for-third-phase-of-lok-sabha-elections-ends-this-evening

கர்நாடகத்தில் இரம்டாம்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 2 -வது கட்டமாக கல்புர்கி, ஷிமோகா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கல்புர்கியில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஷிமோகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உட்பட 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

14 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 3 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்தார். மங்களூரு, பாகல்கோட்டை, சிக்கோடி, பீஜாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் பேசினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராய்ச்சூர், சிக்கோடி, பாகல்கோட்டை, ஹாவேரி உள்ளிட்ட தொகுதிகளில் உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி ஆகியோர் வடகர்நாடக மாவட்டங்களில் முகாமிட்டு தீவிர வாக்குவேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அங்கு பிரசாரம் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close