ஒரேயொரு வாக்காளருக்காக தனியாக வாக்குச்சாவடி !

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 05:08 pm
a-polling-booth-in-gir-forest-for-one-person

குஜராத் மாநிலத்தில் நாளை மறுதினம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஒரேயொரு வாக்காளருக்காக தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் பூசாாியான மஹந்த் பரத்தாஸ் என்பவா் குஜராத்தின் ஜுனாகட் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கிர் சரணாலயம் அருகே உள்ள பனீஜ் கிராமத்தின்‌ வனப்பகுதியில் வசித்து வருகிறார். 

வனத்தில் வசித்து வந்தாலும் வாக்குப்பதிவு செய்வதை ஒருபோதும் தவறவிட்டதில்லை‌. ஆசிரமத்தில் வசித்துவரும் மஹந்த் பரத்தாஸ் வாக்களிக்க கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ‌தனி வாக்குச்சாவடி‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஜுனாகட் மக்கள‌வைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மஹந்த‌ பரத்தாஸ் வாக்குப்பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மூன்று தேர்தல் அதிகாரிகள், ஒரு காவலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்‌. ‌இதற்காக தேர்தல் ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது.

எந்த வாக்காளரும் தனது பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே வாக்குப்பதிவு செய்ய பயணிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிமுறைகள் இருப்பதால், மஹந்த் பரத்தாசுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜுனாகட் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி‌ரஜாபதி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close