நானா? பயங்கரவாதிகளா? பிரதமா் மோடி ஆவேசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 06:00 pm
i-dont-care-for-pm-chair-pm-modi-in-gujarat

நான் பிரதமர் நாற்காலியில் தொடர்ந்து பதவி வகித்தாலும், இல்லையெனினும், நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். 

மக்களவை தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அதில் அவர் பேசியதாவது, "நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது என்னுடைய மாநில மக்களின் கடமை. அப்படி செய்தால் மீண்டும் எங்களுடைய ஆட்சி அமையும். 

ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றால் இது ஏன் நடந்தது? என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி விவாதமேடை நடத்தப்படும். 

மோடி அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்று எனக்கு தெரியவில்லை என்று சரத்பவார் கூறுகிறார். அவருக்கே இது தெரியவில்லை என்றால் இம்ரான் கான் எங்கிருந்து தெரிந்துக்கொள்ளப் போகிறார்?

நான் பிரதமர் நாற்காலியில் தொடர்ந்து பதவி வகித்தாலும், இல்லையெனினும், நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்க்கப் போகிறேன்" என  நரேந்திர மோடி அப்போது ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close