தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி - ஒரே வாரத்தில் 16 மாணவர்கள் தற்கொலை !

  டேவிட்   | Last Modified : 26 Apr, 2019 07:22 am
16-suicide-due-to-exam-failure-in-telengana

தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தி காரணமாக ஒரே வாரத்தில் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்ற இன்டர்மீடியட் தேர்வுகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 9.74 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கடந்த 18-ம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில் சுமார் 3.28 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், மாணவர்கள் விரக்தியடைந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close