வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Apr, 2019 06:13 pm
mohd-shami-s-wife-arrested-after-high-drama-at-in-laws-released-later

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கடந்த மார்ச் மாதம் பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். அதில் தன்னிடம் வரதட்சணை கேட்டு ஷமி குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும், ஷமியின் சகோதரர் தன்னிடம் தவறாக நடக்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேற்கு வங்க மாநில போலீசார் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமோரா பகுதியில் உள்ள ஷமியின் வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அதிரடியாக நுழைந்த ஹசின் ஜஹான் அங்கு இருந்த ஷமியின்  குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் ஷமியின் குடும்பத்தினர் ஹசின் ஜஹானை வெளியேறும் படி கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்து அருகில் இருந்த அறைக்குள் தன்னுடைய குழந்தையை அழைத்த கொண்டு கதவை மூடி கொண்டார்.

இது குறித்து ஷமியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹசின் ஜஹானை கைது செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close