ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து!

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 11:17 am
high-court-canceled-the-authority-given-by-the-central-government-to-governor-kiran-bedi

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும், இதனால் மாநில அரசின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்எல்ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். மேலும்,  புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை குறித்த ஆவணங்களை பெற அதிகாரம் இல்லை எனவும், புதுச்சேரி முதலமைச்சரின் அதிகாரத்தில்  தலையிட முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close