ஐ.எஸ்., பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 11:36 am
inspired-by-lanka-blasts-mastermind-isis-suspect-held-for-planning-to-carry-out-similar-attack-in-kerala

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்  தொடர்பாக, கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞரை  தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அந்த நபருக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கை தலைநகர் கொழும்புவில், உள்ள தேவாலயம் உள்பட ,8க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.

இதில் 359 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர், கேரளாவில் பதுங்கியுள்ளதாக தேசிய புலனாய்வு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த சில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காசர்கோட்டில், இரண்டு இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த சோதனையின் முடிவில், காசர்கோட்டை சேர்ந்த, 29 வயது நிரம்பிய ரியாஸ் அபுபக்கர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இவர், தான் ஒரு தீவிரவாதிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக என்.ஐ.ஏ., தரப்பு தெரிவித்து இருக்கிறது. தனக்கும், ஐ.எஸ்., அமைப்பில் உள்ள சிலருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக இவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கேரளாவிலும் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அந்த சந்தர்பத்துக்காக காத்திருந்ததாகவும், கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தள்ளார்.

இலங்கையில் தாக்குதல் நடத்திய சரான் ஹாசின் பேச்சால் தான் கவரப்பட்டதாகவும், அவரின் நண்பர்கள் பலரை தனக்கு தெரியும் என்று தெரிவத்துள்ளார் .  

மேலும், தனக்கு ஐ.எஸ்., அமைப்பில் உள்ள பலர், தன்னுடன் வலைதளத்தில் தொடர்பு வைத்துள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் தெரிவத்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close