குஜராத்: உயிரியியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு வசதிகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 12:03 pm
ice-slabs-fruits-glucose-keep-animals-cool-at-gujarat-zoo

குஜராத்தில் நிலவி வரும் கடும் வெப்பத்தின் காரணமாக அங்கிருக்கும் உயிரியில் பூங்காவில், விலங்குகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோத்ராவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏராளமான வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது.

இதையடுத்து உயிரியில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரிய வகை குருவிகள் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தன. இதையடுத்து பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் ஐஸ் ஸ்லாப்கள், ஏர்கூலர்கள், நீர் தெளிப்பான் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விலங்குகளுக்கு ஊட்டச்சத்தான உணவு வகைகள், தர்பூசனி, கரும்பு, பப்பாளி ஆகிய பழங்களுகம் வழங்கப்பட்டு வருகிறது.

விஸ்வமித்ரி நதி கரை அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர் என்றும் இங்கு 1095 வகையான அரிய வகை விலங்குள், பறவைகள் மற்றும் ஆசிய சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close