திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 05:49 pm
gold-bars-worth-rs-3-crore-recovered-from-technician-at-trivandrum-international-airport

கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொழில்நுட்ப ஊழியரிடம் இருந்து 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய பயணிகளிம் சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனால் தங்கம் ஏதும் பிடிபடவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வேலை பார்க்கும் தொழில்நுட்ப ஊழியரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரிடம் தங்கம் இருப்பதை ஓப்புக்கொண்டார்.

இதையடுத்து விமான நிலைய போலீசார் அவரிடம் இருந்து 9.9 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close