ஃபானி புயல் எதிரொலி- ஒடிசாவில் மிக கன மழை பெய்யும்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 06:14 pm
odisha-kerala-on-high-alert-as-cyclone-fani-set-to-intensify-into-very-severe-storm

ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் அதன் விளைவாக ஒடிசாவில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வந்த ஃபானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ளது.

இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் ஒடிசா மாநிலத்தின் பூரி மற்றும் பலோசார் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபானி புயலால் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளில் 160 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close