தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 May, 2019 11:37 am
5-members-of-a-family-died-due-to-fire-accident-in-lucknow

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், மாயாவதி காலனியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று நள்ளிரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு தீ பரவி அருகில் இருந்த எரிவாயு கிடங்குக்கும் பரவியுள்ளது.

அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால், தீ வேகமாக பரவியது.  இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், அந்த வீட்டில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close