ஃபனி புயல் : ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 01 May, 2019 12:02 pm
cyclone-strengthens-odisha-on

ஃபனி புயல் வருகிற 3 ஆம் தேதி கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின்  பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.  

புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசாவின் பல கடலோர  மாவட்டங்களில் சேதம் ஏற்படக் கூடும் என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஃபனி புயல் ஒடிசாவை நெருங்குவதால், அங்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோசமான வானிலை என்பதைக் குறிக்கும் வகையில் ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடற்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஃபனி புயல் காரணமாக அங்கு, 205 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close