மஹாராஷ்டிரா- மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 10 போலீசார் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 01 May, 2019 02:34 pm
naxals-torch-over-50-vechiles-machines-in-maharashtra-s-gadchiroli

மஹாராஷ்டிர மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதியில் போலீசார் சென்ற வாகனத்தை கண்ணி வெடி கொண்டு நக்லைட்டுகள் வெடிக்கச் செய்ததில் பத்து  காவலர்கள் உயிரழந்துள்ளனர். அதையடுத்து போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு போலீசாருக்கும் தீவிர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

இதனிடையே இன்று காலை  கட்சிரோலி மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், நேற்று நள்ளிரவில் நக்சலைட்டுகள் சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதில் அனைத்து இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமாயின. சேதமான பொருட்களின் மதிப்பு  1 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close