டெல்லி:தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 May, 2019 02:36 pm
3-teens-taking-selfies-jumped-to-avoid-train-hit-by-another-in-haryana

டெல்லியில் தண்டவாளத்தின் மத்தியில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் உறவினர்கள் 3 பேர்  திருமணத்திற்காக டெல்லிக்கு சென்று இருந்தனர். டெல்லியில் பானிபட் பூங்கா பகுதியில் அவர்கள் செல்பி எடுத்தபடி இருந்தனர். அந்த பூங்கா பகுதி அருகில் உள்ள ரயில் தண்டவாளத்துக்குள் சென்று செல்போனில் செல்பி எடுத்தனர்.

அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ரயிலையும் சேர்த்து செல்பி எடுக்க வேண்டும் என்று அவர்கள் 4 பேருக்கும் ஆசை ஏற்பட்டது.

தண்டவாளத்தின் மத்தியில் நின்றபடி அவர்கள் ரயில் வரும் திசையை நோக்கி செல்பி எடுத்தனர். இதற்குள் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் ரயிலில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர்.

மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக அடுத்த தண்டவாளத்தில் குதித்து உயிர் பிழைத்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து செல்பி மோகம் ஏற்படுத்தும் சோகம் குறித்து மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close