ஹிமாச்சல்: ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 12:31 pm
5-killed-5-injured-as-jeep-falls-into-gorge-in-mandi-district-of-himachal-pradesh

ஹிமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் ரூபா என்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் வாடகை ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். மண்டி மாவட்டம் பதார் என்ற இடம் அருகே ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த 250 அடி பள்ளத்தில் கவிழந்தது.

இதில் ஜீப்பில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேரை பதான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close