ஸ்ரீநகர் – பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் தடை நீக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 03:34 pm
curbs-on-civilian-traffic-lifted-northern-part-of-nh-44-thrown-open

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் – பாரமுல்லா இடையிலான என்.ஹெச் 44 தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. 

ஸ்ரீநகர் – பாரமுல்லா இடையிலான நெடுஞ்சாலையில் இனி, ஞாயிறு, புதன் ஆகிய தினங்களில் பொதுமக்கள் சென்று வர எந்த தடையும் இல்லை. மே 2ந்தேதி முதல் இந்த அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் செல்லும் வகையில் தடை நீக்கப்படும்.

அனந்த்தக் மற்றும் குல்கம் மாவட்டங்களில் தேர்தல் முடிந்துவிட்டதால், அங்கு பாதுக்காப்பு படைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

எனினும் தெற்கு காஷ்மீர் பகுதியில் ஸ்ரீ நகர் – உதம்பூர் இடையிலான நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கான தடை தொடரும் என்று அரசு செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close