ஹெல்மெட் அணியவில்லை- கார் ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 04:56 pm
kerala-police-gives-challan-to-car-driver-for-not-wearing-helmet

கேரளாவில் ஹெல்மட் அணியவில்லை என்று கார் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள முரண்நகை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் சாஸ்தான்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்றிருந்த போக்குவரத்து போலீசார் குமாரின் காரை நிறுத்தும்படி செய்கை செய்துள்ளனர்.

இதனால் குமார் தனது காரை நிறுத்தியுள்ளார். அவர் சாலை விதிகளை மீறி வந்ததாக கூறிய போலீசார், அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தை கட்டிய குமார் தனது வீட்டுக்கு வந்து அபராதம் கட்டிய ரசீதை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

அந்த ரசீதில் கார் எண்ணை போட்டு, ஹெல்மெட் அணியவில்லை என்ற குற்றத்திற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று எழுதியிருந்தது. இதை பார்த்த குமார் அதிர்ச்சியடைந்தார். இதை தனது முகநூல் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close