பாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய மாவோயிஸ்டு தலைவர் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 06:05 pm
top-maoist-commander-involved-in-bjp-mla-s-killing-eliminated-in-chhattisgarh

பாஜக எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய மாவோயிஸ்டு தலைவர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி பாஜக எம்எல்ஏ பீமா மாண்ட்வி சென்ற கார் பஸ்தார் என்ற பகுதியில் சென்றபோ து கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் காரில் பயணம் செய்த பீமா மாண்ட்வி உள்பட 4 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்டு தலைவர் மாத்வி முய்யா என்பவரை பற்றி துப்பு கொடுத்தால் 8 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாத்வி முய்யா தண்டேவாடா பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் மாத்வி முய்யா போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மாவோயிஸ்டு தலைவர் மாத்வி முய்யா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close