ஒடிசாவை நெருங்கும் ஃபானி புயல்: 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

  டேவிட்   | Last Modified : 03 May, 2019 08:17 am
odisha-fani-storm

வங்கக்கடலில் கடந்த மாதம் 25-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. ஃபானி என பெயர் சூட்டப்பட்ட இந்தப் புயல், தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதை மாறி, அதி தீவிர புயலாக  ஒடிசாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இந்தப் புயல் தெற்கு பூரியை தாக்கும் என கூறப்படுகிறது. 

புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 8 லட்சம் பேரை வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.  200 க்கும் மேற்பட்ட ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. மேலும்,தேசிய பேரிடர் மீட்புப் படை, கப்பற்படையினர், விமானப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். கப்பல்கள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close