டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 5 பேர் பலி- 29 பேர் காயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 12:04 pm
5-killed-29-injured-as-tractor-trolley-overturns-in-up

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் டிராலி கவிழந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரியவான் பகுதியில், ஹர்டோய் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தங்கள் கிராமத்திற்கு டிராக்டர் டிராலியில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழந்தது. இந்த விபத்தில் 1 குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடதிலேயே உயிரிழந்தனர்.

மேலும் 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close