திருமண விடுப்பு தராத மேலதிகாரி- சுட்டு கொன்ற காவலர்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 03:22 pm
jawan-kills-officer-and-injures-two-for-denying-wedding-leave

திருமணம் நடக்கவுள்ள தனக்கு விடுப்பு அளிக்காமல் பணிச்சுமைகளைத் தொடர்ந்து  தந்து வந்த மேலதிகாரியை, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகருக்கு உட்பட்ட ஹவுராவில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆயுதப்படை வீரர் லக்ஷ்மிகாந்த் பர்மன். அஸ்ஸாம் ரைபிள் படையை சேர்ந்த இவருக்கு இம்மாதம் 20ம் தேதி திருமணம் நிச்சியிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அவருக்கு விடுப்பு வழங்க அவரது மேலதிகாரி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிக அளவிலான பணிகளையும் லக்ஷ்மிகாந்த் பர்மனுக்கு அவருடைய மேலதிகாரி வழங்கிவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், முகாமில் இருந்த தனது மேலதிகாரி உள்பட அங்கிருந்த காவலர்கள் மீது  துப்பாக்கியால் 13 ரவுண்டுகள் சுட்டுள்ளார். 

இதில் அவரது மேலதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 காவலர்கள் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த மற்ற காவலர்கள் லக்ஷ்மிகாந்த் பர்மனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close