ஒடிசாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்: பிரதமர்

  அனிதா   | Last Modified : 04 May, 2019 09:16 am
the-central-government-will-provide-necessary-assistance-to-odisha-prime-minister

ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசா மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள், மின் கம்பங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஃபனி புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டு மொத்த நாடும் துணை நிற்கிறது என்றும் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close