பேருந்து கவிழ்ந்து விபத்து- 40 பெண் ஊழியர்கள் காயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 04 May, 2019 11:48 am
several-hurt-as-bus-with-42-women-passengers-overturns-in-noida

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று காலை பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 40 பெண் ஊழியர்கள் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 93வது செக்டர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பெண் ஊழியர்கள் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படுகாயமடைந்த சிலர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close